LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 18, 2019

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு

பன்முகத்தன்மை குறித்த அறிக்கையிடுவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது.

நொராட்டின் நிதியுதவியுடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இன்ர நியூஸ் அமைப்பு என்பன இணைந்து நேற்றும் இன்றும் இந்த செயலமர்வினை நடத்தினர்.

இந்த ஊடக செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபன வருகைதரு விரிவுரையாளருமான தேவகௌரி சுரேந்திரன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான என்.எம்.எம்.அமீன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

இந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7