அமெரிக்காவில் டேவிஸ் லோவட் – கிறிஸ்டா டேவிஸ் என்ற தம்பதிக்கு கடந்தவருடம் டிசம்பர் 25ஆம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு ரைலே ஆர்கேடியா டயன் லோவட் என பெயரிட்டனர்.கிறிஸ்டா கருவுற்று 18 வாரங்கள் ஆகியிருந்த நிலையில், அவரது வயிற்றில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி குழந்தை பிறக்கும்போதே மிகவும் அரிதான சில பாகங்கள் மூளையில் இல்லாமல் பிறந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் பெற்றோரிடம், குழந்தை 30 நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருக்காது என தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்த போதும், அனைவரையும் ஆச்சரிப்பபடுத்தும் வகையில் மருத்துவர்களின் முயற்சியால் ஒரு வாரம் வரை உயிருடன் இருந்தது.
குழந்தை இறந்த பின்பு உடல் உறுப்புகளை தானம் செய்ய நினைத்தால் தானம் செய்யலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்தநிலையில் டேவிஸ், லோவட் இருவரும் ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தங்கி, குழந்தை ரைலே உயிர் பிரியும் வரை உடனிருந்தனர்.
அத்துடன், டேவிஸ் குழந்தையை தொடர்ந்து கண்காணித் போது, ரைலே அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட அழவே இல்லை எனவும், இறப்பதற்கு சற்று முன் லேசாக அழுததை கண்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். பின்னர் ஒக்ஸிஜனின் அளவு கணிசமாக குறைந்து குழந்தையின் உயிரிழந்தது.
இதையடுத்து மருத்துவரின் அறிவுரையின் படி, உயிரிழந்த குழந்தையின் இதயவால்வுகள் இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டன. சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டன.





