LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

ஆளுநருக்கு மற்றொரு தீர்மானத்தை தமிழக அரசு அனுப்பாதது ஏன் – வேல்முருகன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், அடுத்த தீர்மானத்தை தமிழக அரசு அனுப்பாதது ஏன் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161 இன் கீழ் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இணங்க, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் கையெழுத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் ஆளுநர் அதில் கையெழுத்திடவில்லை. இது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பாக இப்படி ஒரு கொடூரம் தங்களுக்கு இழைக்கப்படுவதைக் கண்டித்து வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக அவர் மனைவி நளினியும் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, இந்த சட்டமீறலை மக்களிடம் முறையிட்டு வருகிறார்.

ஆனால், தமிழக அரசோ இதைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. அது கடமையும் பொறுப்பும் உள்ள அரசாக இருக்குமானால், இத்தனை நாட்கள் ஆகியும் ஆளுநர் கையெழுத்திடாத பட்சத்தில், சட்டப்படியான மறு தீர்மானத்தை அனுப்பி அவரைக் கையெழுத்திடச் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏன் செய்யவில்லை பழனிசாமி அரசு?

காரணம் வெளிப்படை. மத்திய பாஜக அரசின் தயவினால்தான் சட்டவிரோதமாக ஆட்சியிலேயே ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது அதிமுக அரசு. அப்படியிருக்க அதன் சொல்லை மீறுவதெப்படி?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி சேர வேண்டியுள்ளது. அதனால் பாஜகவின் சொல்லை மீறி அதிமுக அரசு எதையும் செய்வதற்கில்லை.

சட்டத்தை மதிக்காத ஆட்சிகளே மத்தியிலும் மாநிலத்திலும் இருப்பதால் தமிழக மக்கள் ஏமாற்றப்படுவதுதான் மிச்சமாகியுள்ளது. இந்த ஆட்சிகளை அப்புறப்படுத்துவது ஒன்றே மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு முதல் படியாக அமையும்.

அதனால் இந்த அரசுக்கு எதிரான போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், அடுத்த தீர்மானத்தை பழனிசாமி அரசு அனுப்பாதது ஏன்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7