LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

வெடிகுண்டு அச்சுறுத்தல் – அமெரிக்கர் கைது!

கனடாவின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவிலுள்ள மூன்று முக்கிய பாடசாலைகள் மற்றும் Walmart Canada உள்ளிட்ட பகுதிகளுக்கு  வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவிலுள்ள மூன்று முக்கிய பாடசாலைகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசி ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7