மற்றுமொரு அரசாங்க முடக்கத்தை தவிர்த்துக் கொள்ளும் வகையில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரிடையே நேற்று (திங்கட்கிழமை) இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு நிதியளிப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால், இதனை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரிப்பாரா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் டெக்சாஸில் அரசியல் பிரசாரமொன்றில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டில் 35 நாட்களாக நீடித்துவந்த அரசாங்க துறைகளின் முடக்கம் கடந்த மாதம் 25ஆம் திகதி தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
எனினும், எதிர்வரும் 15ஆம் திகதி வரையே அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடம்பெறும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
எனினும், செனட் சபையின் எல்லை பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவுகளில் அதிருப்தி கொண்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி அரசாங்கம் மீண்டும் முடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மற்றுமொரு அரசாங்க முடக்கத்தை தவிர்க்கும் வகையில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரிடையே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






