LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 14, 2019

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – ரணில் கடும் கண்டனம்!

ஜம்மு காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.

விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் தொடரணியாகச் சென்றுகொண்டிருந்தபோது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ” காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மிருகத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

இஹற்கு முன்னர் 1989 ல் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு என் இரங்கலை தெரிவிகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7