அரச நிர்வாகத்தின் மீது அரசாங்கம் சர்வாதிகார போக்கிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது கண்டிக்கத்தக்கது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுங்க பணிப்பாளரது பதவி நீக்கத்தினை தொடர்ந்து சுங்க திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு இன்று வரை ஒரு தீர்வு முன்னைப்பக்கப்படவில்லை.
இதனூடாக அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே வெளிப்படுகின்றது என ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டினார்.





