ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “ரஃபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக சமர்பிக்கப்பட்ட அறிக்கை வெரும் கண்துடைப்பாக காணப்படுவதுடன் போர் விமானங்களின் கொள்வனவு விலை குறித்த தகவல்கள் எதுவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 126 போர் விமானங்களை தொழிநுட்பப் பரிமாற்றத்துடன் சேர்த்து 11.198 கோடிக்கு கொள்வனவு செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் ஒரு போர் விமானத்தின் விலை 88.1 கோடியாகவே இருந்தது. ஆனால் தற்பொழுது கொள்வனவு செய்யப்படவுள்ள போர் விமானங்களின் கொள்வனவு விலை சுமார் 288 கோடியாக காணப்படுகிறது.
இது மக்களின் வரிபணத்தை தேவையில்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்ல பா.ஜ.க துணைப்புரிவதாக அமைந்துள்ளது.
இதேவேளை குறித்த அறிக்கையில் அதன் தொழிநுட்ப பரிமாற்றத்திற்கான கணக்கு தொடர்பில் குறிப்பிடவில்லை“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பிலான சி.ஏ.ஜி அறிக்கை நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சம்ர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.






