(பாண்டி)
ஒட்டமாவடி ஷரிப் அலி வித்தியாலயத்திற்கு தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.பாடசாலை அதிபர் எஸ்.அஜ்மீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
இதன்போது இராஜாங்க அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்ளவனவு செய்யப்பட்ட தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் அதிபரிடம் இராஜாங்க அமைச்சர் கையளித்தார்.
அத்தோடு ஒட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சர் றிஷாட் பதியுத்தீனிடம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டு கொண்டதற்கு இணங்க பாடசாலை காணிக்கான நிதியினை கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் இன்று இடம்பெற்றது.
அதிபர் திருமதி.சைனம்பு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு ஐந்து இலட்சம் ரூபா நிதியை அதிபரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உறுப்பினர் எஸ்.அமீர், மூத்த கல்விமான் எஸ்.காதர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.






