LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 14, 2019

ஐக்கியநாடுகள் சபையின் சுற்றுச் சுழல் நிகழச்சி திட்டம்

(பாண்டி)
ஐக்கிய நாடுகள் சபையின்  சுற்றுச் சூழல் நிகழச்சிப் பிரிவும்  தெற்காசிய கூட்டுறவு சுற்றுச் சூழல் நிகழ்ச்சி பிரிவும் இணைந்து இன்று புதன் கிழமை மாலை (13) பாசிக்குடா சுற்றுலா விடுதியில் கடல் நீர் மாசுபடுதல் தொடர்பான கலந்துரையாடல்  நிகழ்ச்சி திட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

  ஜக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல்  பிரிவின்  நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்  கிறிஸ்தோபர் றொக்ஸ், தெற்காசிய கூட்டுறவு சுற்றுச் சூழல் நிகழ்ச்சிப் பிரிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவாஜி பத்ரா மற்றும் பேராதனியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் எஸ்.பி. நிசங்க ஆகியோர்கள் பங்குபற்றி விரிவுரையாற்றினார்கள்.

இதன்போது தரைசார்ந்த திண்மக்கழிவுகளினால் கடல் மாசுபடுதலை ஏற்படுத்தும்  வழிமுறைகளை கண்டறிதல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான தீர்வு முறைகள் அடையாளம் காணப்பட்டது.

 இதன்போது வேறுபட்ட  துறைசார்ந்த சங்க பிரதிநிதிகளும் அரச துறைசார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் போது அவ்வவ் துறைசார்ந்த மாசடைதல் தொடர்பான காரணிகள் அவ் துறைசார்ந்தவர்களினால்  முன்வைக்கப்பட்டது.

 அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில்  தீர்வு காணப்படும் என இதன் போது தெரிவிக்கப்பட்டது.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7