LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 5, 2019

வடக்கில் வெளியாகும் பத்திரிகையின் ஆசிரியருக்கு ஆவா குழுவுடன் தொடர்பு! - சிங்கள ஊடகம் அதிர்ச்சித் தகவல்கள்

 வடக்கில் வெளியாகும் காலைக் கதிர்  பத்திரிகையின் ஆசிரியரும், உரிமையாளருமான நடேசப்பிள்ளை வித்தியாதரன் மற்றும் வடக்கின் இரு அரசியல்வாதிகளுக்கு ஆவா குழுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற தகவலை அத தெரன ஊடகம் வெளியிட்டுள்ளது . இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருளானந்தம் அருண் என்ற இளைஞனே அத தெரன ஊடகத்திற்கு இந்த பரபரப்பு தகவலை வழங்கியுள்ளார்.

கடந்த காலத்தில் வடக்கில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஆவா குழு உறுப்பினரான இந்த இளைஞன் அத தெரன  சிங்கள ஊடகத்திற்கு  வழங்கிய செவ்வியில் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அந்த இளைஞன் மேலும் தெரிவிக்கையில் -

ஆவா குழு, காலைக் கதிர் பத்திரிகையின் ஆசிரியரும், உரிமையாளருமான நடேசப்பிள்ளை வித்தியாதரன்  மற்றும் வடக்கின் இரு அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. இவர்களை சட்டத்திற்கு முன்னாள் நிறுத்த வேண்டும்.

ஆவா என்ற குழுவை சிலர் உருவாக்கி கொண்டனரே தவிர, யாழில் அப்படி ஒரு குழு இல்லை.

யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு விளையாடுவதற்கு ஒரு சிறிய இடமேனும் இல்லை என்ற போதிலும் கொழும்பு பிரதேசத்தில் சிலர் நடப்பதற்கு உட்பட தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது என்றும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இளைஞனின்  முழுமையான செவ்வி எதிர்வரும் வியாழக் கிழமை இரவு 10.00 மணிக்கு  அத தெரன தொலைக்காடசியில் ஒளிபரப்பப்படவுள்ளது. https://bit.ly/2WA9MLI








 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7