கனடா "உள்ளம் " நிறுவனத்தின் சமுகப்பணியின் இவ்வாண்டுக்கான ஆரம்ப நிகழ்வாக இன்று(05-02-2019) மாலை மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களில் இருந்து க.பொ.த சாதாரண தரம் படிக்கும் தேர்வு செய்யப்பட்ட 12 மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு உள்ளம் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.வி.மைக்கல் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
உள்ளம் நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உள்ளம் நிறுவனம் ஆற்றி வரும் பங்களிப்பு பற்றியும் உரையாற்றிய அவர் இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் காந்தி சேவா சங்க தலைவர் கவிஞர் கதிர்பாரதிதாசன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.




















