LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

இரு பிரதான கட்சிகளுமே நாட்டை நாசமாக்க காரணம் – ரில்வின் சில்வா

இரண்டு பிரதான கட்சிகளுமே நாட்டை நாசமாக்கி இலங்கையின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதான இரண்டு கட்சிகளும் இந்த நாட்டினை நாசமாக்கி இலங்கையின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

தேசிய அரசாங்கம்  ஒன்றினை அமைத்ததன் நோக்கத்தினை பிரதான இரண்டு தலைவர்களும் கைவிட்டு தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே செயற்பட்டு வருகின்றனர்.

எனவே அரசியல் குழப்பங்களை சரிசெய்ய வேண்டுமென்றால் பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்துவதே தீர்வாக அமையும்” என கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7