LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 21, 2019

மருதமுனையைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.

மருதமுனை,பெரியநீலாவணை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் இலங்கை நிருவாக சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டு நிருவாக சேவை அதிகாரியானார்.இவர் எதிர்வரும் 2019-03-05ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை அரச நிருவாக நிறுவனத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவருக்கான நியமனத்தைப் பெற்று ஒரு வருட பயிற்சிக்குச் செல்லவுள்ளார்.
1991.01-04ஆம் திகதி பிறந்த இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார்.இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கற்று விளையாட்டு,விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவப் பட்டதாரியாகி வருமானப் பரிசோதகராக பதவி பெற்றார்.
அதன் பின்னர் வருமானப் பரிசோதகர் பதவியை விட்டு விலகி 2017ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தைப் பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்தில் இராமகிருஷ்னன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக் கடமையாற்றிய நிலையிலேயே இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.இவர் சமூக சேவையில் அதிக ஆர்வமுடன் செயற்பட்டு வருகின்றார்.
மருதமுனை ஷம்ஸியன் அமைப்பின் தலைவராகவும்,மிமா சமூக சேவை அமைப்பு உள்ளீட்ட பல அமைப்புக்களில் உறுப்பினராகவும் இருந்து செயற்பட்டு வருகின்றார்.இவர் மருதமுனை,அக்பர் கிராமத்தைச் சேர்ந்த அஹமது சிறாஜூதீன்,ஜஃபுல் அறவியா தம்பதியின் புதல்வராவார். 

.

பி.எம்.எம்.ஏ.காதர்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7