நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க கூட்டணிக்காக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை தன்வசப்படுத்த அ.தி.மு.க, மற்றும் தி.மு.க கூட்ணி தீவிர முயற்சிகளில் ஈபட்டுவருகின்றன.நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகம் எடுத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ள நிலையில் தே.மு.தி.க. நிலை என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் முடிவுக்காக திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட்டு கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் காத்திருக்கின்றனர்.
எனினும் நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளது.





