இந்தமுறை தேர்தல் புதிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்கள் பெரும்பாலானவர்கள் பெண்களாவர்
இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
அந்த வகையில் நேற்று (திங்கட்கிழமை) அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சியினரை சந்தித்து உரையாடினார்.
இதன்போது அவர் “ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவி காலத்தில் முழுமையாக பணியாற்ற மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
இனப்பாகுபாடு மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தினந்தோறும் டுவிட்டரில் ட்ரம்ப் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
இந்தநிலையில, 2020 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அவர் சிறைக்கு செல்வது உறுதி. உண்மையில் அந்த கருத்துகள் மிகவும் மோசமானவை. மக்கள் அந்த டுவிட்டர் பதிவுகளை நம்பி ஏமாறக்கூடாது” என என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






