(பாண்டி)
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பட்டில் கல்குடா கல்வி வலயத்திற்குட்ட பாடசாலை அதிபர்களுக்கு பாடசாலை பாதுகாப்பு திட்டம் தொடர்பான கருத்தரங்கு வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்திற்குட்ட பாடசாலை அதிபர்கள், கல்குடா கல்வி வலயத்தின் அனர்த்த முகாமைத்துவ பொறுப்பாளர் எஸ்.சிவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட உத்தியோகத்தர் மன்சூர் அஹமட், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.ஹசீர் ஆகியோர் வளவார்களாக கலந்து கொண்டு அனர்த்த பாதுகாப்பு தொடர்பான கருத்துகளை வழங்கினர்.





