(பாண்டி)

சந்தேகத்திற்கிடமான முறையில் மூடைகள் சிலவற்றினை ஏற்றிக் கொண்டு கல்குடா வீதியில் வந்த லொறியினை கல்குடா வீதி போக்குவரத்து பொலிசார் சோதனை செய்த போது அவை ஆற்றில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிப்பிகள் என அடையாளம் கண்டனர்.
இவற்றினை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அவை பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
லொறி மற்றும் சாரதியினை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கருங்காலிச்சோலை பேத்தாழையில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை சிப்பி மூடைகளை பழுதடைந்த லொறி ஒன்றில் ஏற்றி சென்றமை தொடர்பாக கல்குடா பொலிசார் லொறியின்சாரதியை கைது செய்துள்ளதுடன், லொறியினையும் திங்கட்கிழமை மாலை கைப்பற்றியுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.நாகரத்தின தெரிவித்தார்.