இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆட்டோ பேரணியை நடாத்தியதுடன் வாழைச்சேனை புகையிரத நிலைய சந்தியில் சுதந்திரதின நிகழ்வுகளை அதன் தலைவரும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான கே.எல்.அஸ்மி தலைமையில் இடம் பெற்றது..
இதே வேளை கல்குடா ஆட்டோ சாரதிகள் சங்கமும் கல்குடா தொகுதி ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கமும் இணைந்து அதன் தலைவர்களான எம்.புஹாரி மற்றும் எம்.எஸ்.எம்.சபீர் ஆகியோரது தலைமையில் நடாத்திய ஆட்டோ பேரணி ஓட்டமாவடியில் இருந்து ஆரம்பமாகி வாழைச்சேனையினூடாக ஓட்டமாவடி பிரதேச சபையை சென்றடைந்தது.





