LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 4, 2019

நாசிவந்தீவில் 25 வீடுகளுக்கு அடிக்கல் நட்டுவைப்பு

                                                                    (பாண்டி)
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கம்உதாவ செமட்ட செவண திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் வீட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவந்தீவு பகுதியில் 25 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 மேலும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்ஜித், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன், கிராம அதிகாரி க.ஜெகதீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 இங்கு 25 பயனாளிகளுக்கு 13 பேர்ச் காணியும், ஐந்து இலட்சம் ரூபாய் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதி பயனாளிகளின் பங்களிப்புடன் வீட்டுத் திட்டம் அமையப்பெறவுள்ளது.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7