கடும் இயற்கை சீற்றம் காரணமாக வடக்கு சிலியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாக அங்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வௌ்ளப்பெருக்கில் 1800 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. கடந்த ஒரு வாரகாலமாக நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து அங்கு மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக வடக்கு பிராந்தியமான ஆரிகா, பரினாகொட்டா, அன்டோஃபகஸ்டா மற்றும் தராபகா பகுதிகளைச் சேர்ந்த சுமார் 282 பேர் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். சிலியின் தேசிய அவசர நிலை மீட்பு மற்றும் உள்துறை அமைச்சு இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
173 வீடுகள் முற்றிலும் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், 127 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை 1546 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.





