LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

ஒட்டாவாவில் கத்திக்குத்து : 44 வயதுடையவர் படுகாயம், ஒருவர் கைது!

ஒட்டாவா லோர்ட்ரௌன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

380 முர்ரே செயிண்ட் பகுதியில் நேற்றுமுந்தினம் (சனிக்கிழமை) பிற்பகல் 4:20 மணியளவில் குறித்த கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்றது.

இச் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இருப்பினும் அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து 35 வயதுடையவர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7