LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 10, 2019

கனடா மசூதியில் துப்பாக்கி சூடு – குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் பிணையற்ற ஆயுள் தண்டனை!

கனடாவின் கியூபெக் நகரத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் கடந்த 2017ம் ஆண்டு தொழுகை நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனவரி 29-ம் திகதி மாலை தொழுகை நடைபெற்றபோது, ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் அங்கு நுழைந்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதன்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை பொலிஸார் பின்னர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குறித்த இளைஞர் அலெக்சாண்டர் பிசோனெட் என்பது தெரியவந்தது.

சந்தேகநபர் மீது கியூபெக் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் அலெக்சாண்டர் பிசோனெட் (வயது 29) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் 40 ஆண்டுகள் வரை பிணை பெற முடியாது என்றும் உத்தரவிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7