LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, January 26, 2019

பிரபுதேவா உட்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் – முழுவிபரம்

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் இவ்வாண்டில் வழங்கப்படவுள்ளவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது.

இதில், நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநருமான பிரபுதேவா உட்பட மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பத்ம விபூஷன், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகள் முழுவிபரம்:

பத்ம விபூஷன் விருது பெற்றவர்களின் விபரங்கள்:

1. நாட்டுப்புற கலைஞர் தீஜன்பாய்.
2. டிஜிபோட்டி அதிபர் இஸ்மாயில் ஒமர்
3. எல்.என்.டி. சேர்மன் ஏ.எம்.நாயக்
4. எழுத்தாளர் பல்வந்த் முரேஷ்வர் புரந்தரே

பத்ம பூஷண் விருது பெற்றவர்களின் விபரங்கள்:

1. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன்
2. மறைந்த எழுத்தாளர் குல்தீப் நாயர்
4. முன்னாள் சி.ஏ.ஜி. தலைவர் வி.கே.சுங்குலு
5. முன்னாள் லோகசபா துணை சபாநாயகர் கரிய முண்டா.
6. அகாலிதள் தலைவர் தீந்ஷா.
7. மலையேற்ற வீரர் பச்சேந்திரபால்.
8. லோக்சபா எம்.பி. நாராயண யாதவ்
9. நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 14 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்படுகிறன.

பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் விபரங்கள்:

1. குத்துச்சண்டை வீரர் பஜ்ரங்பூனியா
2. மதுரை சமூக சேவகி சின்னப்பிள்ளை
3. இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்
4. நடிகர் பிரபு தேவா
5. டாக்டர் ஆர்.பி. ரமணி
6. டிரம்ஸ் சிவமணி
7. நர்த்தகி நட்ராஜ். (பரத நாட்டிய கலைஞர்)
8. பங்காரு அடிகளார்
9. கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்
10. மறைந்த நடிகர் காதர் கான்
11. முன்னாள் தூதரக அதிகாரி எஸ்.ஜெய்ஷங்கர்
12. பாட்மின்டன் வீரர் சரத் கமல்
13. கால்பந்து வீரர் சுனில் சேத்ரி
14. நடிகர் மனோஜ் பாஜ்பாய்
15. டாக்டர் ராமசாமி வெங்கடசாமி
16. மூத்த வழக்கறிஞர் ஹர்விந்தர் சிங் புல்கா
17. ஷாதப் முகம்மது
18. கபடி வீர் அஜய் தாக்கூர் உட்பட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7