மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூதூர் கிழக்கு ,தோப்பூர் பிரதேசங்களில் தற்போது அதிகளவிலான மாடுகள் உயிரிழந்து வருவதாக மாடு வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுவரையில் சுமார் 300 க்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு உயிரிழக்கும் மாடுகளை வீதிகள், காடுகள், கடற்கரையோரங்களில் காணக் கூடியதாய் உள்ளது.
தோப்பூர் பிரதேசத்தில் பிரதான தொழில் வேளாண்மை செய்கை, மாடுவளர்ப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மேய்ச்சல் தரை இல்லாததினால் மாடுகளுக்கு போதுமான உணவு கிடைக்காமையினால் இவ்வாறு உயிரிழப்பதாகவும், மேய்ச்சல் தரை பெற்றுத் தருவதற்கு மூதூர் பிரதேச செயலகம் நடவடிக்கை மேற் கொள்ளுமாக இருந்தால் மாடுகள் உயிரிழப்பதை தவிர்க்க முடியுமெனவும், தமது பொருளாதாரத்தை பாதுகாக்க முடியுமெனவும் மாடு வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(அ . அச்சுதன்)