(பாண்டி)
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வேன் வேக கட்டுப்பாட்டினை இழந்து எதிரே நின்ற மின் கம்பத்துடன் மோதி விபத்திகுள்ளாகியுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (31)காலை சந்திவெளி ஏற்றத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதில் பயணம் மேற்கொண்டவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவும் விபத்தி;குள்ளான வேன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். குறித்த விபத்தினால் மின்சார கம்பிகள் அறுந்து சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.








