LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 29, 2019

பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பாத ரஜினி? - மக்களவைக்கு இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதாக கடந்த 2017 டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பாத ரஜினி, சட்டப்பேரவை தேர்தலின்போது கட்சி தொடங்கி நேரடியாகப் போட்டியிட விரும்பு கிறார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ரஜினிக்கு நெருக்கமான டெல்லி வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ஒருவேளை இரண்டு தேர்தலும் ஒன்றாக வந்துவிடும் என்பதற்காக, பெயர் தவிர கட்சி துவங்குவதற்கான மனு தயாராக வைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் களம் இறங்கினால், தேசிய கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணியும் மற்றொன்றுடன் மோதலையும் சந்திக்க வேண்டி இருக்கும். இதை தவிர்க்க ரஜினி சட்டப்பேரவைத் தேர்தலை மட்டும் குறி வைத்துள்ளார். எக்காரணத் தைக் கொண்டும் தேசிய அரசியல் கட்சிகளை பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை’’ என்றனர்.
2016-ல் டெல்லியின் ஜவஹர் லால் நேரு விளையாட்டரங்கில் 2.0 படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. ஏப்ரல் 6-ல் பாஜக வின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் 83 வயது மனைவி கமலா காலமானார். அவருக்கான அஞ்சலிக் கூட்டம் நேரு விளை யாட்டரங்கு வளாகத்தில் நடைபெற் றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த ரஜினி, அக்கூட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக படப்பிடிப்பை ரத்து செய்து சென்னை திரும்பி விட்டார். பிறகு அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்திருந்தார். இதன் பின்னணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அஞ்சலிக் கூட்டத்திற்காக ரஜினி அளித்த மரியாதை என்று சொல்லப் பட்டாலும், உண்மைக் காரணம் பாஜக தலைவர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது என்கிறது டெல்லி வட்டாரம்.

இதேபோல், ரஜினி அறிவித்த தொலைக்காட்சி சேனலுக்கான அனுமதி பெறவும் இன்னும் மனு செய்யப்படவில்லை. அரசியல் கட்சியை போல், இதன் பூர் வாங்கப் பணிகளும் தயாராக உள் ளன. இதையும் மக்களவை தேர் தலுக்கு பின்னரே துவக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற் பாடுகளை அவரது டெல்லி நண்பர் கள் தயாராக வைத்துள்ளனர்.


மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் அதிக பலன் கிடைக்காது எனவும் ரஜினி கருதுவதாக கூறப்படுகிறது. எனவே, யாருடனும் கூட்டணி வைக்காமல், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சட்டப்பேரவை தேர்தலில் நேரடியாக ரஜினி எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7