LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 23, 2019

பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஜனாதிபதியில் கொள்கைப் பிரகடனத்தின் படி குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி

(பாண்டி)
ஜனாதிபதி ஆட்சி நிலையான நாடு என்ற தொனிப்பொருளில் சிறுநீரக நோய்க் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் ஏற்பாட்டில் சுத்தமான நீரை அருந்துவோம் என்னும் வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஜனாதிபதியில் கொள்கைப் பிரகடனத்தின் படி குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.உவைத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி செயலக இணைப்பாளர்களான வசந்த அபயகோன், எம்.ஐ.பைசல் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.வி.முஸம்மில் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

மேலும் அதிதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், வாழைச்சேனை பிரதேச சபை பிரதி தவிசாளருமான எஸ்.யசோதரன், மாவட்ட அமைப்பாளர் எஸ்.சதீஸ்காந், கடற்படை தலைமை உத்தியோகத்தர் லெப்ணல் கமான்டர் விஜயரத்ன, கடற்படை கிழக்கு மாகாண இணைப்பாளர் லெப்டினல் எஸ்.தனபால,மாவட்ட அமைப்பாளரின் இளைஞர் இணைப்பாளர் ஏ.சி.அரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறுநீரக நோய்க் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பதினைந்து இலட்சம் ரூபாய் நிதி மூலமும், கடற்படையினரின் பங்களிப்புடனும் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர்களினதும்,பிரதேச மக்களினதும் நன்மை கருதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.வி.முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7