
காஷ்மீர் மாநிலம், சோன்மாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் இன்று (சனிக்கிழமை) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை சில மணி நேரம் இடம்பெற்றுள்ளது.
இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதுடன் இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 70 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
