
பெங்களூரில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஓப்பரேசன் தாமரை திட்டத்தை பாரதிய ஜனதா கைவிடவில்லை. அது இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சிக்கவில்லை என்றும் அங்கு ஓப்பரேசன் தாமரை நடைபெறவில்லை என எடியூரப்பா கூறி இருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது. கடந்த வியாழக்கிழமை இரவு கூட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பாரதிய ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேரம் பேசி இருக்கிறார்கள்.
அதற்காக மிகப்பெரிய பரிசை கொடுப்பதாக அவர்களிடம் கூறியிருக்கின்றார்கள். மிகப்பெரிய பரிசு மட்டுமல்ல பணமும் கொடுப்பதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் பாரதிய ஜனதாவினர் பேரம் பேசி இருக்கின்றனர்” என முதலமைச்சர் குமாரசாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
