அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு நடைபெறவுள்ளது.இந்நிலையில் வட கொரிய கிம் ஜோங் உன் சென்ற ரயில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட்டுவிட்டது என சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
சீன ஜனாதிபதி சி சின்பிங் விடுத்த அழைப்பை ஏற்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பெய்ஜிங்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் கிம்முக்கும் இடையிலான, இரண்டாவது உச்சநிலைச் சந்திப்புப் பற்றிய பேச்சு நடந்துவரும் வேளையில் கிம், சி சின்பிங்கை சந்தித்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பைப் பற்றிய தகவல்களை சீன, வடகொரிய அரசாங்க ஊடகங்கள் வெளியிடவில்லை. இந்நிலையில் அவர் அங்கிருந்து தனியார் ரயிலில் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





