மத்திய அரசாங்கத்தின் கார்பன் வரி விதிப்பு நாட்டை மந்த நிலைக்கு தள்ளும் என ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் எச்சரித்துள்ளார்.கனடாவின் பொருளாதார குழுவில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே காணப்படுகின்ற பொருளாதார நடைமுறைகள் குறித்த எச்சரிக்கைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், இந்த புதிய கார்பன் வரி வேலைவாய்ப்புகளையும், உற்பத்தி திறனையும் பாதிக்கும் எனத் தெரிவித்தார்.
கார்பன் வரி எமது மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்குமான பொருளாதார பேரழிவாக காணப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.





