
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை Kingston பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த கைது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், “நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.
அந்தவகையில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை அரசாங்கம் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
