உலக திரைப்படத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.இந்நிலையில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான ஒஸ்கார் பரிந்துரை பட்டியல் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.
இதன்படி திரைப்பட பிரிவில் பிளாக் பாந்தர், கிரீன் புக், ரோமா, எ ஸ்டார் இஸ் பார்ன், தி ஃபேவரிட், பிளாக்கிளான்ஸ்மேன், போஹிமியன் ராப்ஸாடி ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் ‘தி ஃபேவரிட்’ மற்றும் ‘ரோமா ‘ஆகிய திரைப்படங்கள் சுமார் 10 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
மேலும் சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு தொழிநுட்பப் பிரிவுகளிலும் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.
91ஆவது ஒஸ்கார் விருதுவழங்கும் விழா, வழமைப்போன்று இம்முறையும் பிரம்மாண்டமான முறையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





