
(பி.எம்.எம்.ஏ.காதர்)
கல்முனை மாநகர சபையின் முன்ளாள் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் மர்ஹ_ம் ஏ.ஆர்.மன்சூர் பற்றிய “ஏ.ஆர்.மன்சூர்; வாழ்வும் பணிகளும்” ;நூல் வெளியீடு எதிர்வரும் 2019-01-12ஆம் திகதி சனிக்கிழமை பி.ப.3.30 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்ல தம்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
திருமதி ஸொஹறா பன்சூர் முன்னிலையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்,நகர திட்டமிடல்,தேசிய நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான சட்ட முதுமானி றஊப் ஹக்கீம் கலந்து கொள்கின்றார்.
பேராதனைப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் நூல் ஆய்வுரை நிகழ்த்தவுள்ளார்,தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நூல் அறிமுகவுரையை நிகழ்த்தவுள்ளார்.
நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தவுள்ளார்.இந்த நிகழ்வை ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசன் ஏற்பாடு செய்துள்ளது.





