
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து ஜமால் கஷோக்கி படுகொலைசெய்யப்பட்டதற்கு சவுதி இளவரசரின் அதிகாரிகளே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,.
ஐ.நாவின் விசேட பிரதிநிதி அக்னஸ் களமார்ட் (Agnes Callamard) தலைமையில் இந்த விசாரணை நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் திங்கட்கிழமை இஸ்தான்புல் செல்லும் அவர் இப்படுகொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
இக்குழுவில் பிரித்தானிய வழக்கறிஞரான ஹெலனா கென்னடி (Helena Kennedy) மற்றும் போர்த்துகீசிய தடயவியல் நோயியல் நிபுணரான டுவார்ட் நூனோ வியேரா (Duarte Nuno Vieira) ஆகியோரும் இணைந்து செயற்படுவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கிய மற்றும் சவுதி அதிகாரிகளால் இவ்வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இப்படுகொலை மீது அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்களின் பொறுப்பு குறித்தும் இக்குழு விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளது.
