அவர் தனது முடிவு பற்றி கூறுகையில் “என் வீடு என்று கூறும் இடத்தில் பருவநிலை மாற்றத்தால் இத்தகைய மோசமான நிகழ்வுகள் நடப்பது வேதனை அளிக்கிறது.” என்று குறிப்பிடுகிறார்.
”பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கு எங்கள் பங்கை ஆற்றுவதாயின் குழந்தைகள் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று என் துணைவியுடன் நான் தீவிரமாக ஆலோசித்தேன்.
கடுமையான சூழ்நிலைகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சிலவேளைகளில் இந்த முடிவை நினைத்து நாங்கள் பிற்காலத்தில் வருத்தப்படலாம்” என்றும் கனடாவைச் சேர்ந்த அந்த சூழலியலாளர் கூறியுள்ளார்.
அத்துடன், “குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதன் மூலம், நான் பங்காற்ற முடியுமானால் அது சுற்றுச்சூழலுக்கு நான் செய்யும் நன்மையாகக் கருதுகிறேன்.
எங்கள் துறைமுகங்களை அழிக்கும் மிகமோசமான அலைகளை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். ஸ்ட்ரீம் வளைகுடா வெப்பமடைந்து வருவதால் சூறாவளிகள் உண்டாகின்றன.
கடல் மட்டம் உயர்வதால் இந்த தீவின் கரைகளில் மணல் அரிப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் பருவ மாற்றத்தைத் தடுக்க வளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
குறைவாக குழந்தைகளை பெற்று கொள்வதுடன் உணவு மற்றும் வாகனப்பயன்பாட்டையும் குறைக்கவேண்டும்” என்று அவர் தனது நிலைப்பாட்டை வௌியிட்டுள்ளார்.






