——— நமசிவாய வாழ்க ———
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
பொன்னம் பலத்தான்
பின்வல கையில்
பிரணவ நாதம்
உடுக்கிசை கருவி
ஆடல் வள்ளல்
கூத்திசை கடவுள்
இடமொரு கையில்
அக்கினி பிழம்பு
முயலகன் தன்னில்
ஊன்றிய பாதம்
தூக்கிய கால்கள்
தீவிர தன்மை
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
தூக்கிய திருக்கை
அடைக்கலம் தரவும்
மடித்ததோர் கையில்
அருளினை பெறவும்
சுற்றிய நாகம்
யோகப் பொருளாய்
எழுப்பினால் உச்சி
குண்டலனி சக்தி
இடையினை சுற்றி
இருக்கும் புலித்தோல்
இடமாய் பறக்கும்துணியும்
இயற்கையின் சக்தி
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
நின்தனை சுற்றி
இருக்கும் நெருப்பு
ஞான வெளியில்
தாண்டவம் ஆட
கேசம் பறக்க
சீராய் முடிச்சாய்
வற்றா நதியும்
ஐந்தாம் பிறையும்
இரட்டை தாமரை
நின்றதில் ஆடும்
தாண்டவ கோனே
என் நடராசா ...
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
பொன்னம் பலத்தான்
பின்வல கையில்
பிரணவ நாதம்
உடுக்கிசை கருவி
ஆடல் வள்ளல்
கூத்திசை கடவுள்
இடமொரு கையில்
அக்கினி பிழம்பு
முயலகன் தன்னில்
ஊன்றிய பாதம்
தூக்கிய கால்கள்
தீவிர தன்மை
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
தூக்கிய திருக்கை
அடைக்கலம் தரவும்
மடித்ததோர் கையில்
அருளினை பெறவும்
சுற்றிய நாகம்
யோகப் பொருளாய்
எழுப்பினால் உச்சி
குண்டலனி சக்தி
இடையினை சுற்றி
இருக்கும் புலித்தோல்
இடமாய் பறக்கும்துணியும்
இயற்கையின் சக்தி
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
நின்தனை சுற்றி
இருக்கும் நெருப்பு
ஞான வெளியில்
தாண்டவம் ஆட
கேசம் பறக்க
சீராய் முடிச்சாய்
வற்றா நதியும்
ஐந்தாம் பிறையும்
இரட்டை தாமரை
நின்றதில் ஆடும்
தாண்டவ கோனே
என் நடராசா ...
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
அற்புதம் அற்புதம்
ஆடல் அரசே
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏






