விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களையடுத்து அட்லி, விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி விஜய்யின் பிறந்த நாளன்று வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக விஜய் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் ‘பரியேறும் பெருமாள்’ கதிர், யோகிபாபு, ரோபோசங்கர், விவேக், தீனா, டேனியல் பாலாஜி, ஆனந்த்பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்தை AGS நிறுவனம் தயாரித்துவருகிறது.
இப்படத்தை எதிர்வரும் தீபாவளி தினத்தில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.





