
தெற்கு சுலாவெசி மாகாணத்தில் கடந்த இரு தினங்களாக அடை மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று (வியாழக்கிழமை) அப்பகுதியிலுள்ள அணை உடைந்துள்ளது.
அனர்த்தத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகளில் மீட்பு பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அனர்த்தம் காரணமாக சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் செயற்பாடுகளை இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
வெள்ளம் காரணமாக அப்பகுதியின் முக்கிய நெடுஞ்சாலை தடைப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்கள் ஹெலிகொப்டர் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
17 ஆயிரம் தீவுகளை கொண்ட இந்தோனேசியா அடிக்கடி இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து பேரழிவுகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
