
வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதம் குறித்து, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 அளவிலான நிலவரப்படி, நியூ பிரவுன்ஸ்விக் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் மின் விநியோகத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளில் தமது பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் நியூ பிரவுன்ஸ்விக் மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை மாநிலத்தின் தென்பகுதியின் பெரும்பாலான பாகங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், பயண எச்சரிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ப்ரீடெரிக்டன் நகரின் தென்பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இருந்தோர் அனைவரும் வெள்ளப் பெருக்கு காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
