பிரெக்ஸிற் ஒப்பந்தத்தின் அர்ப்பணிப்புகளின் ஒரு பகுதியாக வடஅயர்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ள சமாதான திட்டங்களுக்கு £300 மில்லியன் நிதியுதவி வழங்குவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.பிரெக்ஸிற்றுக்கு பின்னர் வட அயர்லாந்தில் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான இங்கிலாந்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக வட அயர்லாந்து தெரிவித்துள்ளது.
மேலும் 2027 ஆம் ஆண்டு வரையில் இந்நிதி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஐரிஷ் எல்லையின் இருபக்கங்களிலும் முக்கிய திட்டங்களை வழங்க உதவுமெனவும் அமைதியான மற்றும் உறுதியான சமுதாயத்தில் வருங்கால தலைமுறை வளர்வதற்கு வழிவகுக்குமெனவும் வடஅயர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் கரென் பிராட்லி தெரிவித்தார்.





