
அமெரிக்காவின் 41ஆவது அதிபர் ஜார்ஜ் H.W புஷ் அவருடைய வயது 94 ஆகும். கடந்த பல மாதங்களுக்கு முன்னாள் அவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். இவர் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர்.
இந்நிலையில் அவரது மகன் ஜார்ஜ் W. புஷ் தன்னுடைய தந்தையின் மரணம் பற்றிய தகவலை அவரது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.