
அந்தவகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 7 அன்று, ஹமில்டன் நகரில் உள்ள மேற்கு துறைமுகப் பகுதியிலிருந்து புறப்பட்டு, லேக்சாரின் மேற்குப் பகுதியூடாக காலை 5:19 மணிக்கு நயாகராக்கு சென்று அங்கிருந்து செயின்ட் கேடாரினில் யூனியன் ஸ்டேஷனுக்குத் தொடர்ந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் மாலை 5 மணிக்கு யூனியன் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு செயின்ட் கேடாரன்ஸ் மற்றும் நயாகரா ஊடக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரிவாக்கப்பட்ட சேவைகள் ஏற்கனவே இருக்கும் இரயில் பாதைகளைப் பயன்படுத்த சி.என். உடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப் யூரெக் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த சேவை நான்கு வருடங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.
