LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 18, 2018

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச கலாசார விழாவும் வாழை மடல் மலர் வெளியீடும்

கலாசார அலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாண பண்பாட்டல்வல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச கலாசார விழாவும் வாழை மடல் மலர் வெளியீடும் நேற்று (17.12.2018) திங்கள் கிழமை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு பாராட்டுப்பெரும் இளம் கலைஞர்கள், விஷேட கௌரவ விருது என்பன வழங்கப்பட்டதுடன் கலாசார விழாவை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்டத்திலும் நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மூத்த கலைஞர்களாக பல்துரை சார்ந்த விருது யூ அஹமட்டுக்கு வழங்கியதுடன் இலக்கியத்திற்கான விருது ஏ.அப்துல் மஜீதுக்கு வழங்கியதுடன் கிராமிய வைத்தியத்திற்கான விருது எல்.அப்துல் காதருக்கும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இளம் கலைஞர்களுக்கான விருது ஜிப்ரிஹாஸனுக்கு சிறுகதைக்கான விருதும், யூ.எல்.ஸல்மானுல் ஹரீசுக்கு கவிதைக்கான விருதும், பீ.ரீ.பாத்திமா அஸ்பாவுக்கு ஓவியத்திற்கான விருதும் எம்.எம்.அஸ்லத்திற்கு அறிவிப்பாளருக்கான விருதும், ஐ.எல்.அப்துல் நாசருக்கு மரக் கைவினைக்கான விருதும் வழங்கப்பட்டதுடன் விஷேட கௌரவ விருது வாழைச்சேனை நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபு கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எம்.ஏ.றஹ்மதுல்லாஹ்வுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன் இளம் ஓவியர்கலாளான எம்.சமீம் மற்றும் உசனார் நிமாஸ்; ஆகியோரால் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்முஸம்மிலின் உருவம் ஐந்து நிமிடத்தில் வரைந்து சபையோரின் பாராட்டினையும் பெற்றனர்.

பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ரஞ்சித் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.அப்துல் கபூர், கே.எல்.அஸ்மி, எம்.பி.எம்.தையூப்,எம்.ஐ.எம்.இம்தியாஸ், கோறளைப்பற்று மேற்கு கோட்ட கல்வி பணிப்பாளர் மெ;.எஸ்.கே.றஹ்மான், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான், சாட்டோ இணைய தளத்தின் பணிப்பாளர் வை.எல்.மன்சூர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.



















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7