LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 18, 2018

வவுனியா கல்லுமலை ஆலய வளாகத்தில் விகாரை அமைக்க முயற்சி: பிரதேசத்தில் குழப்பநிலை!

வவுனியா கல்லுமலை ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டுத் தலம் அமைக்கும் முயற்சியால் அப்பிரதேசத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாகவே கிராம மக்களுக்கும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்குமிடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இவ் விடயம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் கடந்த 1952ம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களினால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
இதேவேளை இவ் கோவில் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டடங்கள் என பல காணப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களிற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் கல், மணல் மற்றும் பல கட்டடப்பொருட்கள் இவ்வளாகத்தில் இறக்கி தமது வேலைகளை முன்னெடுத்திருந்த நிலையில் பொதுமக்களினால் இவ்வேலைகளை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினையடுத்து குறித்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
அதன் பின்னர் இன்று மீண்டும் தொல்பொருள் திணைக்களத்தினால் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் வேலைகள் ஆரம்பக்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு வருகைதந்த கிராமவாசிகள் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததுடன் வேலைகளை இடைநிறுத்துமாறும் கூறியிருந்தனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் ஆகியோர் வருகைதந்து இது தொடர்பாக அப்பிரதேச மக்களுடனும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடனும் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது இதனை புனரமைப்பு செய்யலாமே தவிர புதிதாக கட்ட முடியாதெனவும், தற்போது வேலைகளை நிறுத்துமாறும் கூறியதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து விலகி சென்றிருந்தனர்.
இதேவேளை இது தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அலுவலகத்திற்கு சென்று பிராந்திய முகாமையாளரிடம் வினவ முற்பட்ட போதும் அவர் கருத்து எதனையும் கூற முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7