LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 12, 2018

காலநிலை ஒப்பந்த விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : ஐ.நா செயலாளர்

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாடுகள் தவறுவது மிகவும் ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குத்ரஸ் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போலந்தில் இடம்பெறும் காலநிலை மாற்றத்துக்கான உச்சிமாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகளிடையே உரையாற்றிய ஐ.நா செயலாளர் பொதுவான அரசியல் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டில் ஒரு உடன்படிக்கையை எட்டுவதற்கு தவறினால் காலநிலை மாற்றத்தை தடுப்பதற்குரிய வாய்ப்பை நாங்கள் இழந்துவிடுவோமெனவும் இந்நிலை மிகவும் ஆபத்தானது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

உலக வெப்பமயமாதலால் உலக மக்களுக்கு குறிப்பாக சிறிய தீவுகளில் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அரசாங்கங்களின் குழு ஒன்றினால் வெளியிடப்பட்ட அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

உலக நாடுகளால் உடனடியாக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாவிட்டால் ஏற்படக்கூடிய பேரழிவான எதிர்காலத்தையும் இவ்வறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளதாகவும் ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் முடிவடைத்துவருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7