உலகின் முதன்முறையாக தமிழ்ப் பெண்ணொருவர் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.மலேசிய நாடாளுமன்றத்தில் எஸ்.தங்கேஸ்வரி என்ற பெண் முதன்முறையாக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னதாக மலேசியாவின் பெராக் பிராந்தியத்தின் சட்டமன்ற சபாநாயகராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
அத்துடன் கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் Hutan Melintang பகுதிக்கான பாரிஸன் நேஷனல் கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.





