LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 19, 2018

உறுதி மொழியும் உற்சாகமும் தந்து சென்ற சமகால நடனப்பெண் கலைஞர் சாரா நிக்கலோய்


பேராசிரியர் சி .மௌனகுரு 

ஜேர்மன் நாட்டில் வதியும் சாரா மிக்கோலாய் எனும் இளம் நடனக் கலைஞி மட்டக்களப்பு வந்திருந்தார்.
நேற்று மாலை( 18.12.2018) என்னைச்சந்திக்க என் வீடு தேடி வந்தார்.

சாராமிக்கலோய்
--------------------------------
ஜேர்மனியப் பெண்ணான சாரா மிக்கோலாய் "அசைவுகளே நடனத்தின் அடித்தளம்"   எனக்  கூறி அதன் வழி புதிய நடன பாணியினை உருவாக்க முனையும் ஓர் இளம் பெண் நடனக்கலைஞர் ஆவார்.இவர் பற்றிய தவல்கள்

1.தனது ஐந்தாவது 16 ஆவது வயது வரை வயதிலிருந்து முறையாக பரத நாட்டியம் பயின்றவர் இவர்

2. 2007 ஆம் ஆண்டிலிருந்து சமகால நடனங்களில் முறையாகப் பயிற்சியினை ஜேர்மனியில் பெற்று நிகழ்வுகள் நடத்தி வருகிறார்

3, இவரது இன்றைய நடனங்கள் சமகால நடனத்தின் வெவ்வேறு வகையான சூழல்களை கொண்டனவாக உள்ளன

4. அவரது ஆற்றுகைகள் பரிசோதனை முறையில் அமைந்து பார்ப்போருக்கும் நிகழ்த்து வோருக்கு மிடையே உள்ள உறவைச் சவாலுக்குள்ளாக் குகின்றன

5.வித்தியாசமான கருப்பொருள்களில் சமகால நடனத்தை அளித்து வருகிறார்

நிலை அசைவு ஆடல்
----------------------------------------------------
நிலை ( நிற்றல்) அசைவு, ஆடல் என மூன்று நிலைகளில் நமது உடல் நடனத்தில் இயங்குகிறது

இதனை நாம்

கரணம்

அசைவு

ஆடல்

எனவும் அழைக்கலாம்

108 கரணங்கள் சிற்ப வடிவில் தமிழரிடமுண்டு

நிலையே அசைவாகி அசைவே ஆடலாக மலர்ந்தது
எனலாம்

108 நடன கரணங்கள் பற்றி கலாநிதி பத்மா சுப்பிரமணியம் பெரும் ஆய்வுகள் செய்துள்ளார்

தமிழ் மரபில் ஆடல்கள் பற்றியும் சில ஆய்வுகள் எம்மிடமுள்ளன

அசைவுகள் பற்றி யாரும் எழுதியதாகத் தெரியவில்லை

சாரா மிக்கலோயின் கவனம் இந்த அசைவின் பால் செல்கிறது

சமகால நடனமும் அசைவும்
-------------------------------------------------------------
சமகால நடனம் அசைவை அடிப்படையாகக் கொண்டது.

தென்றலாக.

கொடியாக

புகையாக

புயலாக

காற்றாக

மின்னலாக

அசையும் நடனக் கலைஞர்களைக் கண்டுள்ளோம்.

அசைவின்றி இயக்கம் இல்லை

;அனைத்தும் அசைந்தபடி இருக்கின்றன,

நாதம் அதாவது இசை பிரபஞ்சமெங்கணும் கேட்டபடி இருக்கிறது.

அதனை உணர்ந்தோர் நாதத்துடன் இணைகின்றனர்,தம்மை இழக்கின்றனர்

இதனை நாம் அசைவுக்கும் பொருத்திப்பார்க்கலாம்

அசைவு, பிரபஞ்சம் எங்கணும் நடந்தபடி இருக்கிறது அதை உணர்ந்தோர் அந்த அசைவுகளில் இணைகின்றனர் தம்மை அதில் இழக்கின்றனர்

சாரா மிக்கொலாயிடம் பேசிக்கொண்டிருக்கையில் இந்த அசைவுகளில் இணைந்து தம்மை இழந்தவராக எனக்குத் தெரிந்தார்

எனவேதான் அசைவுகளை அடித்தளமாக கொண்ட நடனக் கலைஞர் என நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்

இத்தனைக்கும் அவர் ஓர் விசை வேகம் மிக்க ஆடல் கலைஞர்

மட்டக்களப்பில் அவர் வேர்கொண்டவர்

,அவர் தாயார் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்

. தந்தையார் மேற்கு நாட்டினர்

தாயார் ஓர் ஆடற்கலைஞர்

தந்தையார் ஓர் மேற்கத்திய இசைக்கலைஞர்

பலமான அதிவாரம் கொண்டவர் சாரா

இரண்டு மரபுகளின் இரண்டு பண்பாடுகளின் இணைப்பில் மலர்ந்த ஹை பிரைட் செடி இது

மகளின் பரத நிகழ்வொன்றை மட்டக்களப்பில் வைக்க விரும்பினார் அவரது தாயார்

2008 ஆம் ஆண்டு சாராவின் 16 வயதில் மட்ட்க்களப்பில் நடந்த அவரது பரத நடன அரங்கேற்றத்திற்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தனர்

தமிழ் தெரியாத ஜேர்மனியச் சிறு பெண்ணின் பரத நடனம் அழைப்பை உதாசீனம் செய்யாமல சென்று பார்த்து வருவோம் எனப் பரிதாபத்தோடு சென்ற என்னை சாரா மிக்கலோயின் ஆரம்ப ஆடல் சற்று நிமிர வைத்தது

அவர் ஆடிய வர்ணம் என்னை வியப்பின் உச்சம் கொண்டு சென்றது.

தமிழ்ப் பதங்களில் அவர் காண்பித்த பாவங்கள் மனதில் பதிந்தன

அப்போது நான் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவராக இருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து அவரை கிழக்குப் லகலைக் க்ழகத்தில் ஆட வைத்துக் கௌரவித்தோம்

அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின் அவரை ஜேர்மனியில் 2010 ஆம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது,

பேட்டல் பிரக்ட் நடந்து திரிந்த இடங்களுக்கு என்னை அழத்து சென்றாள் சாரா

அவரின் சிந்தனையில் பல மாற்றங்களை அவதானித்தேன், பெரிய மாற்றங்கள்

ஆசியா/ஆப்பிரிக்காவின் பிரதேச கற்கைகள் நெறியில் ஜேர்மன் ஹம்போல்ட் பல்கலைக் க்ழகத்தில் பட்டம் பெற்ற இவர்

நடனம் மீது கொண்ட பற்றினால் 2016 இல் ஜேர்மனியிலுள்ள கலைப் பல்கலைக்ழகத்தில் நடனத்தில் பீ.ஏ பட்டமும் பெற்றுக் கொண்டார்

சமகால நடனத்தில் ஆழமான பயிற்சி பெற்று இன்று சமகால நடனத்தில் ஆற்றுகையாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்து வருகிறர்

இலங்கையில் வெனூறி, கபிலபளிகவர்த்த்னா ஆகியோர் சமகால நடனத்தை முன்னெடுக்கும் இளம் கலைஞர்கள். இவர்களனைவரும் எனக்கு மிக நெருக்கமானவர்கள்.

வெனூறியின் அழைப்பின் பேரில் கொழும்புக்கு ஓர் கருத்தரங்கிற்கும் பயிற்சிப்பட்டறைக்கும் வந்திருந்தார் சாரா

முன்னவர் இருவரும் கண்டிய நடனப் பயிற்சி பெற்றவர்கள் சாரா பரத நடனப்பயிற்சி பெற்றவர்

சாரா மிக்கலோயின் எதிர்பாராத வருகையும் சந்திப்பும் மகிழ்ச்சி தந்தது.

உற்சாகமான உரையாடலாகாவும் சந்திப்பாகவும் அது அமைந்தது

“இப்போது எதை நோக்கி பயணிக்கிறீர்கள்”?

. என நான் அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் என்னை சிந்திக்க வைத்தது

“நடனத்தைக் கேட்பது என்ற கருத்தியலில் சிந்திக்கிறேன் செயற்படுகிறேன் சேர்"

என்றாள்

பார்க்கும் ஓர் கலையை எப்படிக் கேட்கும் கலையாகப் பார்க்கலாம்?

உரையாடல் தொடர்ந்தது

. நடனத்தின் பூரண அனுபவம் அவரவர் பெறுகின்ற அனுபவமே எனக்கூறிய அவள் பார்வைப்புலனும் முற்கற்பிதங்களும் பூரண அனுபவம் தரா ஆனால் கேட்டு அதன் மூலம் உருவாக்கும் உணர்வு பூரண அனுபவதிற்கு இட்டுச்செல்லும் என விவாதிக்க ஆரம்பித்தாள்

ஏற்றுக்கொள்வது சிரமமாயிருந்தாலும் என்னை அது சிந்திக்க வைத்தது

சமகால நடனம் செய்யும் நடனகாரர் பரிசோதனை காரர்கள்.நடனமே வாழ்வாக வாழ்பவர்கள்.

புதிய புதிய திசைகளில் போக்குகளில் செல்ல விரும்புபவர்கள்.

மரபுகாரர் அவர்களை இலகுவில் அங்கீகரியார்

ஆனால் எனக்கு இந்த மரபு மீறுவோர் மீது ஓர் விருப்புண்டு

,அவர்களிற் பலர் நடனமே வாழ்வாக வாழ்பவர்கள்

மரபு நடனகாரர்களிலும் மரபு மீறுவோர் உண்டு

அவர்களிற் பலர் மரபுகள் சிலவற்றை மீறியவர்கள் அந்த மீறல்கள் பரத நடனத்தை புதிய திசைகளுக்கு எடுத்தும் சென்றுள்ளது.

ஏனெனில் அவர்களும் நடனமே வாழ்வாக வாழ்ந்தவர்கள்

சாராவும் நடனமே வாழ்வாக வாழ்பவள்

26 வயது நிரம்பி நின்ற அவளின் தனது 16 வயது அரங்கேற்றத்தை நினைவு கூர்ந்தேன்

இன்று அவள்
தோற்றத்திலும்
,சிந்தனையிலும்
செயற்பாட்டிலும்
அறிவிலும்
பல மடங்கு மாறி நிற்கிறாள்.

புதிய திசைகளில் பயணிக்கிறாள்

அன்றிரவு 9.00 மணிக்கு அவர் புறப்பட வேண்டி இருந்தது.மாலை 6,00 மணிக்கு வந்தாள்,ஒன்றரை மணி நேரம் உரையாடி இருப்போம்

கலகலப்பான உரையாடல்

“என்ன செய்வது நானும் கூத்தினடியாக சமகால நடனம் ஒன்றை செய்யலாமா என இந்த வயதிலும் யோசிக்கிறேன்.அதனை வரவேற்பார் யாரும் இல்லை.கூத்தை கெடுக்கிறேன் எனக் குற்றம் சாட்டுவோரும் அவரிடம் போகாதீர்கள் கெட்டுவிடுவீர்கள் என்போரும்தான் அதிகம்'
:
என்று சிரித்தபடி கூறினேன்

“.உங்களைப்போன்ற இளம்தலைமுறையினரிடம் நான் கற்க நிறைய உண்டம்மா”

எனவும் கூறினேன்

“இல்லை இல்லை நாங்கள் உங்களிடம் கற்க நிறைய உண்டு அடுத்த வருடம் நான் மட்ட்க்களப்புக்கு வந்து ஒரு மாதம் தங்கவுள்ளேன் அப்போது உங்களிடம் நான் கூத்துப்பயில வேண்டும்”

என்றாள்

“வாரும் அப்போது நான் இருக்கும் பாக்கியம் இருந்தால் எனக்குத் தெரிந்ததை உனக்குப் பழக்குவதுடன் உன்னிட மிருந்தும் கற்றுக்கொள்கிறேன். எனது உடல் இடம் கொடுத்தால் இருவரும் இணைந்து ஓர் ஆற்றுகை கூடச் செய்யலாம்”

என்றேன்

“ஓ எவ்வளவு இன்பம்”

என அவ் ஆலோசனையை வரவேற்ற அவள் என் இரு கைகளையும் இறுகப் பிடித்து என்  கண்களை  உற்று நோக்கி

“நான் நிட்சயம் வருவேன் சேர்”

என உறுதி மொழி கூறினாள்

நானும்  அவளிடம்

"நானும் நிட்சயம் இருப்பேன்: என பதில் உறுதி கூறினேன்

உறுதி மொழியும் உற்சாகமும் தந்து  சென்றாள் சாரா

இத்தகைய சந்திப்புகள்தானே வாழ்க்கையை என்றும் உயிர்ப்பாக வைக்கின்றன
--------------------------------------------------------------------

முதலாவது படத்தில்  2008  இல்  பரத நடனக்கலைஞராக சாரா
இரண்டாவது படத்தில் 2018 இல் சமகால நடனக் கலைஞர் சாரா

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7