கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹூவாவி தலைமை நிதித்துறை அதிகாரி மெங் வான்ஷோ தொடர்பாக விவகாரம் கனடா மற்றும் சீனாவுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட விடயம் அல்லவென அரசியல் நிபுணர் ஒருவர் கருத்து வௌியிட்டுள்ளார்.ஆனால் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் போட்டியை இன்னும் பரந்த அளவில் காட்டுவதாக பிரித்தானிய பல்கலைக்கழகத்தின் ஆசிய-கனடா உறவுகளுக்கான நிபுணர் போல் இவன்ஸ் தெரிவித்துள்ளார்.
வான்கூவரில் வைத்து சீன சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசைக்கு செவ்வியளித்த போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
மெங், தற்போது பிணை அனுமதி வழங்கப்படாத நிலையில், அயல் நாட்டிடம் ஒப்படைக்கும் நடமுறைக்காக காத்திருக்கின்றார்.
அவர் மிகவுயர்ந்த நிலையில் இருக்கின்ற காரணத்தினாலேயே சீனா தனது மிகப் பெரிய எதிர்விளைவை காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.





